¡Sorpréndeme!

இந்த வார முக்கிய நிகழ்வுகள்... முதன்மைச் செய்திகள்... | weekly news | TAMILNEWS

2023-07-31 1,375 Dailymotion

இந்திய குடியுரிமை வழங்குங்கள்; குடியரசுத் தலைவருக்கு பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் கருணை மனு!
இந்திய குடியுரிமை வழங்க கோரி பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்துள்ளார். பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்தவர் சீமா ஹைதர். ஏற்கனவே திருமணமான இவர் ஆன்லைன் விளையாட்டு மூலம் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா என்பவருடன் அறிமுகமானார். இந்த அறிமுகம் காதலனாதை அடுத்து அவர் நேபாளம் வழியாக இந்தியா வந்து சச்சினுடன் தங்கியிருந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த சூழலில் தனக்கும் 4 குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்கக் கோரி சீமா ஹைதர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கருணை மனு அளித்துள்ளார்.